20. சண்டேச நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 20
இறைவன்: சத்தியகிரிநாதர் (சேய்ஞ்சலூர்), பாலுகந்தநாதர் (திருஆப்பாடி)
இறைவி : சகிதேவி (சேய்ஞ்சலூர்), பெரியநாயகி (திருஆப்பாடி)
தலமரம் : ஆத்தி
தீர்த்தம் : மண்ணியாறு
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : சேய்ஞ்சலூர்
முக்தி தலம் : திருஆப்பாடி
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : தை - உத்திரம்
வரலாறு : திருசேய்ஞ்சலூர் என்னும் தலத்தில் எச்சதத்தன் என்பவருக்கும் பவித்திரை என்பவளுக்கும் மகனாக விசாரசர்மர் அவதாரம் செய்தார். ஒரு சமயம் இடையன் ஒருவன் பசுவினைக் கோலால் அடிப்பதைக் கண்ட இவர் மனம் வருந்தி ஊர் அனுமதி பெற்றுத் தானே பசுக்களை அன்று முதல் மேய்க்க உளம் கொண்டார். பசுக்களை அன்போடு மேய்த்து வரும்போது பசுக்கள் சொரியும் அதிகப்படியான பாலை மணலால் சிவலிங்கம் தாபித்து அபிடேகம் செய்ய ஆரம்பித்தார். இதனை கண்ட ஒருவன் பாலை மணலில் கொட்டி வீணாக்குவதாக நினைத்து ஊரில் சென்று சொன்னான். இது எச்சதத்தன் காதுக்கு எட்டியது. அவன் நேரில் சென்று நிகழ்வதை அறிந்து பால் குடங்களைக் காலால் உதைத்தும் விசாரசர்மரையும் அடித்தான். சிதறிய பாலைக் கண்ட விசாரசர்மர் கோபம் கொண்டு அருகிருந்த கோல் ஒன்றினை எடுத்து எச்சதத்தன் காலின் மீது எறிய அது மழுவாக மாறி அவன் கால்களைத் துண்டித்தது. விசாரசர்மரின் செயலைக் கண்ட இறைவன் அவரது பக்தியை மெச்சி இனி யாமே உமக்குத் தந்தையானோம், எமக்கு அளிக்கப்படும் நிவேதனம், சூடும் மலர், உடை உமக்கே அளித்தோம், சண்டேசுவரர் என்னும் பதவியும் அளித்தோம் என்றருளினார்.
முகவரி : அருள்மிகு. பாலுகந்தநாதர் திருக்கோயில், திருஆப்பாடி– 612504 திருவிடைமருதூர் வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. டி.கே. இராமகிருஷ்ண குருக்கள், சேங்கனூர்
தொலைபேசி : 0435-2457459, அலைபேசி : 9345982373

இருப்பிட வரைபடம்


அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம் 
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் 
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத் 
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்

- பெ.பு. 1266
பாடல் கேளுங்கள்
 அண்டர் பிரானும்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க